'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத்…

'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'

[ஸஹீஹானது-சரியானது] [رواه النسائي في الكبرى]

الشرح

பர்ழான தொழுகை முடிந்த பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம் மாத்திரமே தடையாக உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆயத்துல் குர்ஸி ஸூறா பகராவில் இடம்பெற்றுள்ளது : அந்த வசனம் பின்வருமாறு: 'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255). அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் சூழ்ந்தறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது சிம்மாசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று, அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (பகரா : 255).

فوائد الحديث

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் உயரிய பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும் மகத்தான இந்த வசனத்தின் சிறப்பு.

பர்ழான ஒவ்வொரு தொழுகையின் பின்பும் இந்த வசனத்தை ஓதுவது வரவேற்கத்தக்கது.

நற்காரியங்கள் சுவர்க்கம் செல்வதற்கான வழியாகும்.

التصنيفات

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்