(ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்

(ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

பஜ்ர் மற்றும் அஸ்ர் ஆகிய குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளில் ஆர்வம் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவுருத்துகிறார்கள். இவ்விரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் உரிய முறையில் ஒருவர் நிறைவேற்றி வந்தால் அவர் சுவர்க்கம் பிரவேசிக்க இத்தொழுகைகள் காரணமாக அமையும் என்ற நட்செய்தியை கூறுகிறார்கள்.

فوائد الحديث

ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளைக் கடைப்பிடிப்பதன் (அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்) சிறப்பு குறிப்பிடப்படுகின்றமை. ஏனெனில் ஃபஜ்ர் தொழுகையானது சுகமான உறக்கத்தின் போது எழுந்து நிறைவேற்ற வேண்டிய தொழுகையாகும். அஸர் தொழுகை நேரம் ஒருவர் தனது வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும் நேரமாகும். எனவே எவர் இந்த இரண்டு தொழுகைகளையும் கடைப்பிடிக்கிறாரோ அவர் எஞ்சிய தொழுகைகளை எளிதாகக் கடைப்பிடிப்பார்.

ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகள் 'பர்தைன் தொழுகைகள்' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் ஃபஜ்ர் தொழுகைக்கு இரவின் குளிர்ச்சியும், அஸர் தொழுகைக்கு பகலின் குளிர்ச்சியும் உண்டு, ஆனால் அஸர் தொழுகையின் போது வெப்பம்; அதிகமாக இருந்தாலும், அதற்கு முன்னுள்ள நேரத்தை விடவும் குறைவாகக் காணப்படும். அல்லது சூரியனையும் சந்திரனையும் சேர்த்து 'அல்'கமரைன்' (இரண்டு நிலவுகள்) என்று பெயர் பெற்றது போல, இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட 'பர்தைன்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

التصنيفات

தொழுகையின் சிறப்பு