إعدادات العرض
மூன்றில் ஒரு காரணத்திற்காகவே தவிர ஒரு முஸ்லிமின் இரத்தம் (அவரைக் கொலைசெய்வது) ஹலாலாகமாட்டாது
மூன்றில் ஒரு காரணத்திற்காகவே தவிர ஒரு முஸ்லிமின் இரத்தம் (அவரைக் கொலைசெய்வது) ஹலாலாகமாட்டாது
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மூன்றில் ஒரு காரணத்திற்காகவே தவிர ஒரு முஸ்லிமின் இரத்தம் (அவரைக் கொலைசெய்வது) ஹலாலாகமாட்டாது: திருமணம் முடித்தபின் விபச்சாரம் செய்பவர், இன்னொருவரைக் கொலைசெய்தவர், (முஸ்லிம்) சமூகத்தைப் பிரிந்து, இஸ்லாத்தை விட்டுச் செல்பவர்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Македонски नेपाली دری Lietuvių پښتو Shqip ગુજરાતી ភាសាខ្មែរ Українська Čeština Magyar Српски ქართული ਪੰਜਾਬੀ Kiswahili فارسی ಕನ್ನಡ മലയാളം тоҷикӣ kmr తెలుగు O‘zbekالشرح
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு விடயத்தை செய்தாலே தவிர, அவரது இரத்தம் (உயிர்) ஹராமாகும் என்று தெளிவு படுத்துகின்றார்கள். முதலாவது : ஒருவர் முறையான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்தபின்னரும் விபச்சாரத்தில் ஈடுபடல். கல்லெறிந்து அவரைக் கொல்வது ஹலாலாகும். இரண்டாவது: பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரை, உரிமையின்றி வேண்டுமென்றே கொலை செய்தவர். இவர் - நிபந்தனைகள் பேணப்பட்ட பின்னர் - கொல்லப்படுவார். மூன்றாவது : முஸ்லிம் சமூகத்தை விட்டும் பிரிந்து செல்பவர். அது ஒன்றில் முழுமையாக இஸ்லாத்தை விட்டு வெளியேறி செல்வதாக இருக்கலாம். அல்லது முழுமையாக வெளியேறாமல், இஸ்லாத்தின் சில பகுதிகளை விட்டு வெளியேறிச் செல்வதாக இருக்கலாம். உதாரணமாக, அடர்ந்தேருபவர்கள், வழிப்பறிக்கொள்ளையர்கள், கவாரிஜ்கள் போன்ற ஆட்சிக்கெதிராகப் போரிடுபவர்கள்.فوائد الحديث
இந்த மூன்று செயல்களிலும் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளமை. இவற்றில் ஏதாவதொன்றை செய்பவர், மரண தண்டனைக்குத் தகுதியாகின்றார். அது ஒன்றில் இறைநிராகரிப்பின் காரணமாக இருக்கலாம். இது இஸ்லாத்தை விட்டு வெளியேறியவருக்குரிய தண்டனையாகும். அல்லது 'ஹத்தாக' (அதாவது குற்றத்திற்கான தண்டனையாக) இருக்கலாம். இது திருமணம் முடித்த பின்னர் விபச்சாரம் செய்பவருக்கும், வேண்டுமென்றே கொலை செய்தவருக்கும் உரிய தண்டனையாகும்.
மானங்களைப் பாதுகாத்து, தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம்.
ஒரு முஸ்லிமை மதிப்பதன் அவசியம். மேலும், அவனது உயிர் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளமை.
முஸ்லிம் சமூகத்தை விட்டும் பிரிந்து செல்லாமல், இணைந்திருப்பதன் அவசியம்.
நபி (ஸல்) அவர்களின் அழகான கற்பித்தல் முறை. அதாவது, சிலபோது நபியவர்கள் வகைப்பிரித்துப் பேசுவார்கள். அவ்வாறு வகைப்பிரித்துப் பேசுவது, பிரச்சினைகளை வரையறுத்து, ஒன்றிணைத்து விடும். எனவே, மனனமிட இலகுவாக இருக்கும்.
அல்லாஹ் தஆலா, குற்றவாளிகளைத் தடுப்பதற்காகவும், குற்றங்களை விட்டும் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் குற்றவியல் தண்டனைகளை வைத்துள்ளான்.
இந்த தண்டனைகளை நிறைவேற்றுவது, ஆட்சியாளரின் பொறுப்பில் மாத்திரம் உள்ளதாகும்.
மரணதண்டனை உள்ள காரணிகள் மூன்றை விட அதிகமாகும். ஆனால், அவையனைத்தும் இவற்றோடு இணைந்ததாகவே இருக்கும். இப்னுல் அரபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'அவையனைத்தும் இந்த மூன்று காரணிகளுக்கும் உட்பட்டதாகவே இருக்கும். ஏனெனில், ஒருவன் சூனியம் செய்தாலோ, அல்லது நபியவர்களுக்கு ஏசினாலோ அவன் நிராகரித்தவனாகி விடுகின்றான். எனவே, அவனும், தனது மார்க்கத்தை விட்டுச் செல்பவர்களில் உள்ளடங்கி விடுகின்றான்.
