إعدادات العرض
ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்)…
ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமழான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால். (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.}
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமழான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால். (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.}
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy Українська ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்கள், மூன்று வகை மனிதர்கள் மீது இழிவு, அவமானம் மற்றும் நாசம் போன்றவற்றின் அடையாளமாக அவர்களின் மூக்குகள் மண்ணில் ஒட்டப்பட வேண்டும் என்று அவர்களுக்கு எதிராக துஆ செய்தார்கள்: முதல் வகையினர் : நபி ﷺ அவர்களின் பெயர் கூறப்படும் போது, 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அல்லது அதற்குச் சமமான ஸலவாத்தை சொல்லாமல் விட்டவர். இரண்டாவது வகை: ரமழான் மாதத்தை அடைந்தும், நல்ல வழிபாடுகளில் அலட்சியம் காட்டியதினால், அந்த மாதம் முடிவடையும் முன் அவருக்கு மன்னிப்பு கிடைக்காமல் போனவர். மூன்றாவது வகை: ஒருவர்; முதுமையை அடைந்த பெற்றோர்களை பெற்றிருந்தும், அவர்களுக்குச் செய்த நோவினை மற்றும் அவர்களின் உரிமைகளில் செய்த அலட்சியம் காரணமாக, சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதியை இழந்தவர்.فوائد الحديث
இமாம் ஸின்தி ரஹ் கூறுகிறார்: இம்மூன்று வகையினரிலும் ஒவ்வொருவருக்கும், தங்களிடமிருந்து குறைபாடு இல்லாமல் இருந்திருந்தால், மிகுந்த நன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அலட்சியம் செய்ததால், அந்த நன்மை அவர்களிடமிருந்து தவறி விட்டது ஆகவே அவர்கள் தோல்வியடைந்து நஷ்டமடைந்து போனார்கள்.
நபி ﷺ அவர்களின் பெயர் கூறப்படும் ஒவ்வொரு முறையும், அவர்கள்மீது ஸலவாத்து (பிரார்த்தனை) சொல்ல வேண்டும் என்று ஊக்குவித்தல்.
ரமழான் மாதத்தில் வழிபாடுகளில் அதிக முயற்சி எடுத்து, முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும் என்று ஊக்குவித்தல்.
பெற்றோர்களுக்கு நன்மை செய்வதில் (பிர்ருல்-வாலிதைன்) முழு முயற்சி எடுக்கவும், குறிப்பாக அவர்கள் முதுமையை அடையும் போது, அவர்களை மதித்து மரியாதை செய்யவும் ஊக்குவித்தல்.
