إعدادات العرض
(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு…
(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : (நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் அதிகமாக 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறி வந்தார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français ئۇيغۇرچە Hausa Português Kurdî සිංහල Русский Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Македонски ไทย తెలుగు Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy ភាសាខ្មែរ پښتو Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்குர்ஆனின் (110) ம் அத்தியாயமான இதா ஜாஅ நஸ்ருல்லாஹ் நபியவர்களுக்கு அருளப்பட்டபோது அதில் உள்ள வசனமான ( எனவே உமது இறைவனின் புகழைப் போற்றி, அவனிடம்; மன்னிப்புக் கோருவீராக) என்ற வசனத்தின் கட்டளையின்படி செயல்பட விரைந்தார்கள், அதனால் அவர்கள் தொழுகையில் ருகூஉ மற்றும் ஸஜ்தாவிலும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பாவமன்னிப்புக் கோரினார்கள் அந்த வாசகத்தின் தெளிவுரை வருமாறு : , 'ஸுப்ஹானக' (உமக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத குறைகள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தி உன்னை நான் புகழ்கிறேன்;) 'அல்லாஹும்ம ரப்னா வ பிஹம்திகா' (எங்கள் இறைவனே, உம்மைப் புகழ்ந்து துதிக்கிறேன்;, உம்முடைய தனித்துவம், பண்புகள் மற்றும் செயல்களுக்குத் தகுதியான எல்லா வழிகளிலும் உம்மைப் போற்றி புகழ்கிறேன். எனவே 'அல்லாஹும்ம இக்ஃபிர் லி' (யா அல்லாஹ்! என்னை மன்னித்து, என் பாவங்களை நீக்கிவிடுவாயாக). இந்த வாசகத்தை அதிகம் ருகூவிலும் ஸஜ்தாவிலும் அதிகமதிகம் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.فوائد الحديث
இந்த பிரார்த்தனையை அதிகமாக ருகூஃ, மற்றும் ஸுஜுத் நிலைகளில் அதிகம் ஓதுவது முஸ்தஹப்பாகும். (வரவேற்கத்தக்கதாகும்)
ஆயுளின் கடைசி நாட்களில் இஸ்திஃபார் செய்யுமாறு வேண்டப்பட்டிருப்பத்தல் இது ஒரு விடயத்தை உணர்த்துகிறது (இபாதத்தில் ) வணக்க வழிபாடுகளில் இடம்பெற்ற குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக இபாதத்துக்களில் குறிப்பாக தொழுகையானது இஸ்திஃபாரின் மூலம் முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு துஆவில் அல்லாஹ்வை புகழ்ந்து, துதிசெய்து எல்லா வகையான குறைகளை விட்டும் தூய்மைப்படுத்துவது மிகவும் சிறந்த வழியாகும்.
இஸ்திஃபார் செய்வதன் சிறப்பும் அது எல்லா சூழ்நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டிருப்பதும்.
நபி முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்வுக்கான அடிமைத்தனத்தை முழுமையாக நிறைவேற்றியதும், அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடித்ததும்.
التصنيفات
தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்