'உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால்…

'உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்!

நபிகள் நாயகம் (ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தொழுகையில் ஈடுபடும் ஒருவருக்கு தான் தொழுதது மூன்று ரக்அத்துக்களா? அல்லது நான்கு ரக்அத்க்களா? என்ற சந்தேகம் (தடுமாற்றம்) ஏற்பட்டால் அவர் தொழுததாக சந்தேகிக்கும் நான்காம் ரக்அத்தை தொழுததாக கொள்ளாது, மூன்று ரக்அத்க்கள் தொழுததாக உறுதியாக கொண்டு நான்காம் ரக்அத்தை நிறைவேவுற்றுவார். பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான இரு ஸஜ்தாக்களை செய்வார். அவ்வாறு அவர் தொழுதது உண்மையில் நான்காக இருந்தால் அவர் இன்னொரு ரக்அத்தை சேர்த்து தொழுவதால் ரக்அத்துக்களின் எண்ணிக்கை ஜந்தாக மாறும். ஆனால் அவர் மேலதிக ரக்அத்துக்கான ஸஜ்தா(ஸுஜுத் ஸஹ்வு) ஒரு ரக்அத்திற்கு பகரமாக காணப்படுவதால் அந்தத் தொழுகையின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமையுமே தவிர ஒற்றைபடையாக அமையாது. அவர் மேலதிகமாக தொழும் ரக்அத்தினால் நான்கு ரக்அத் தொழுதிருந்தால் அன்னார் எவ்வித கூடுதல் குறைவின்றி தொழுகையை நிறைவேற்றியுள்ளார். தொழுகையை முடிப்பதற்கு முன் செய்யும் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் ஷைத்தானுக்கு அவமானத்தையும், தோல்வியையும் ஏற்படுத்துவதோடு ஒரு முஸ்லிமை வழிகெடுக்கும் அவனது இலக்கிலிருந்து அவனைத் தூரப்படுத்தி அவனை இழிவின் பால் நகர்த்துகிறது. இந்நிலைக்கான காரணம் அவன் தொழுகையில் ஈடுபவரிடம்; தடுமாற்றத்தை ஏற்படுத்தி அதனை வீணாக்குவதற்கு எத்தனித்ததாகும். இருப்பினும், ஷைத்தான்; ஆதமுக்கு சிரம் தாழ்த்தி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்த அதே செயலின் மூலம் மனிதன் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, ஸஜ்தா செய்த போது இறையடியானின் தொழுகை முழுமையடைந்து விட்டது.

فوائد الحديث

தொழுபவருக்கு தான் தொழும் தொழுகையில் ரக்அத்துக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தை கைவிட்டுவிட்டு, குறைந்தளவு எத்தனை தொழுதுள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு எஞ்சிய ரக்கஅத்துக்களை நிறைவேற்றுவார். ஸலாம் கொடுக்க முன் மறதிக்கான இரு ஸஜ்தாக்களை செய்து, பின் ஸலாம் கொடுப்பார்.

மறதிக்கான இரு ஸஜ்தாக்கள், தொழுகையின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடியதாகவும், ஷைத்தானின் நோக்கத்தை தடுத்து அவனை இழிநிலைக்கு உட்படுத்துவாதாகவும் அவனுக்கான தகுந்த பதிலடியாகவும் உள்ளது.

மறதிக்கான இரு ஸஜ்தாக்கள், தொழுகையின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடியதாகவும், ஷைத்தானின் நோக்கத்தை தடுத்து அவனை இழிநிலைக்கு உட்படுத்துவாதாகவும் அவனுக்கான தகுந்த பதிலடியாகவும் உள்ளது. இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட சந்தேகம் (அஷ்ஷக்) என்பது ஒரு கருத்தை உறுதிப்படுத்துக்கொள்ள முடியாத தடுமாற்ற நிலையைக் குறிக்கும். ஆனால் பெரும்பாலும் குறித்த ஒரு விடயத்தில் இரு நிலைப்பாடுகளில் ஒன்றில் உறுதி காணப்பட்டு அது மிகைத்ததாக இருப்பின் அதனைச் செயற்படுத்தல் வேண்டும்.

மன ஊசலாட்டத்திற்கு எதிராக போராடுமாறும் அதனை ஷரீஆவின் கட்டளைக்கு கட்டுப்படுமாறு வலியுறுத்தவும் ஊக்கப்படுத்தியிருத்தல்.

التصنيفات

மறதி, ஸஜ்தா வசனங்கள், நன்றி செலுத்தல் ஆகியவற்றுக்கான ஸஜ்தா