உனது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமடைந்து இருக்கட்டும்

உனது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமடைந்து இருக்கட்டும்

அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர், 'அல்லாஹ்வுடைய தூதரே! இஸ்லாத்தின் சட்டத்திட்டதிட்டங்கள் எனக்கு அதிகமாக உள்ளன. நான் தொடர்ந்து பேணி வரமுடியுமான ஒரு விடயத்தை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டபோது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : உனது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமடைந்து இருக்கட்டும்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, உபரியான வணக்கங்கள் அவரைப் பொறுத்தவரை அதிகமாக இருப்பதாகவும், தான் பலவீனமாக உள்ளதால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் முறைப்பட்டுவிட்டு, தன்னால் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடியுமான, அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் இலகுவான ஒரு அமலைக் காட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள், எல்லா நிலைகளிலும் தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார், துஆ போன்றவற்றின் மூலம் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்வதில் திளைத்திருக்கக் கூடியதாக அவரது நாவு இருக்கட்டும் என்று வழிகாட்டினார்கள்.

فوائد الحديث

எப்போதும் அல்லாஹ்வை நினைகூர்ந்துகொண்டிருப்பதன் சிறப்பு.

நன்மைக்கான காரணிகளை இலகுபடுத்தியுள்ளமை அல்லாஹ்வின் பேருபகாரங்களில் ஒன்றாகும்.

நன்மை மற்றும் சிறப்பிற்கான வாயில்களில் அடியார்கள் வெவ்வேறான பங்குகளைக் கொண்டுள்ளனர்.

உளப்பூர்வமாக, தஸ்பீஹ், தஹ்மீத், தஹ்லீல், தக்பீர் போன்றவற்றின் ஊடாக நாவினால் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது, பல உபரியான வணக்கங்களுக்கு நிகராக இருக்கும்.

கேள்வி கேட்பவர்களின் நிலைகளைக் கவனித்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான பதிலை நபியவர்கள் வழங்கியுள்ளமை.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்