إعدادات العرض
இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு…
இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேட்க்கட்டும். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்பவர் எவருமில்லை
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேட்க்கட்டும். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்பவர் எவருமில்லை. முஸ்லிமின் அறிவிப்பில் :தனது பிரார்த்தனையை உறுதியுடன் கேட்கட்டும். (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று).
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy Українська ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்கள், துஆவை (பிரார்த்தனையை) ஏதோ ஒரு விடயத்தை நிபந்தனையுடன் இணைத்துக் கேட்பதை தடைசெய்தார்கள். அது 'அல்லாஹ் விரும்பினால்' என்ற நிபந்தனையாக இருந்தாலும் சரியே!. ஏனெனில், அல்லாஹ் விரும்பினாலேயே மன்னிப்பை அளிப்பான் என்பது உறுதியான, சந்தேகமற்ற உண்மை. ஆகவே, அவனுடைய விருப்பத்தை நிபந்தனையாகக் கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு நிபந்தனை விதிப்பது, கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படக் கூடியவர்களிடம் மட்டுமே பொருந்தும்; ஆனால் அல்லாஹ் அதுபோன்ற எந்தக் குறையிலிருந்தும் உயர்ந்தவன். இதை நபி ﷺ அவர்கள் ஹதீஸின் இறுதியில் 'அவனை யாரும் (நிர்ப்பந்திக்க முடியாது) கட்டாயப்படுத்த முடியாது' என்று தெளிவுபடுத்தினார்கள். அதேபோல், அல்லாஹ் எதையும் கொடுப்பதென்பது அவனுக்கு பெரிதாவோ, கடினமானதாகவோ ஆகமாட்டது. அவன் இயலாதவன் அல்ல. ஆகவே, 'நீ விரும்பினால்' என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. துஆவை அவனுடைய விருப்பத்துடன் இணைப்பது, அவனுடைய மன்னிப்பைத் தேவையற்றது போல் கருதுவதன் ஒரு வகையாகும். 'நீ விரும்பினால் எனக்கு இதைத்தா' என்று சொல்லுவது, பொதுவாக அவன் தேவையற்றதாகவோ அல்லது இயலாதவரிடமோ மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் முழுமையான ஆற்றல் உடையவரிடமும், அவசியமாகத் தேவைப்படும் போதும், ஒருவர் தன்னுடைய வேண்டுகோளை உறுதியாகக் கேட்க வேண்டும். அவன் கேட்டதை மிக அவசியமாகத் தேவைப்படும் ஏழைபோல், முழுமையாக அல்லாஹ்வின் மீது சார்ந்து கேட்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ் தான் எவ்விதத் தேவையுமற்றவன் நிறைவானவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன்.فوائد الحديث
துஆவை 'இன்ஷாஅல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று நிபந்தனை செய்து கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வை அவனுக்கு பொருந்தாத வற்றிலிருந்து தூய்மைப்படுத்துதல், மேலும் அவனது அருளின் பரந்த தன்மை, நிறைவான செல்வம், கருணை மற்றும் தயாளத்தன்மை ஆகியவற்றை உணர்த்துகிறது.
அல்லாஹ் நிறைவானவன் மற்றும் பாரிபூரணமிக்க பண்புகளை கொண்டவன் என்பதை உறுதிப்படுத்தப்படுத்தல்.
அல்லாஹ்விடம் உள்ளவற்றைக் குறித்த எதிர்பார்ப்பை பெரிதாகக் கருதுவதோடு, அவனைப் பற்றி நல்ல எண்ணம் கொள்ளுதல்.
சிலர் அறியாமலே துஆவை இறை நாட்டத்துடன் தொடர்படுத்திக் கூறும் நிலைக்கு உட்பட்டுவிடுகிறார்கள் உதாரணமாக: 'இன் ஷாஅல்லாஹ்' அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக', 'இன் ஷாஅல்லாஹ்' 'அல்லாஹ் அவனுக்கு கருணைபுரிவானாக என்று கூறுவது. இந்த ஹதீஸின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது அல்ல.
التصنيفات
துஆவின் ஒழுங்குகள்