துஆவின் ஒழுங்குகள்

துஆவின் ஒழுங்குகள்

3- ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இம்மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பிரதிபலனாக வழங்குகிறான் என்று கூறிய போது நபித்தோழர்கள் அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்