''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்

''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்;. யார் கஷ்டப்படும் ஒருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு இலகு படுத்துவான். எவரொருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கின்றாரோ இம்மையிலும் மறுமையிலும்; அல்லாஹ் அவருடைய குறையை மறைக்கின்றான். அடியான் தன்னுடைய சகோதரனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வும் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கிறான். அறிவைத் தேடி யார் ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அதன் மூலம் அவருக்கு சுவர்க்கத்திற்கான பாதையை அல்லாஹ் இலகுபடுதிக் கொடுப்பான். இறையில்லங்களில் ஒன்றில் ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் கற்றுக் கொண்டால் அவர்களின் மீது அமைதி இறங்கும் இறையருள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் சிலாகித்துக் கூறுவான். எவருடைய செயல் அவரைத் தாமதிக்கச் செய்கிறதோ அவரது பரம்பரை முன்னேற்றி விடமாட்டாது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்; வெகுமதியானது அவர் பிற முஸ்லிம்களுக்கு செய்யும் அதே வகையான செயல்களைப் போலவே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். யார் இவ்வுலகில் ஒரு விசுவாசியின் துன்பம் மற்றும் கஷ்டத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளின் துன்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பான். மேலும்,யார் கஷ்டத்தில் உள்ள ஒருவரின் கஷ்டத்தை எளிதாக்கி, அவருடைய சிரமத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமை விவகாரங்களை அவருக்கு இலகுபடுத்திக்கொடுப்பான் . ஒரு முஸ்லிமிடம் காணப்படுகின்ற பகிரங்கப்படுத்தப்படுவத்துவதற்கு அவசியமல்லாத குறைகள் மற்றும் தவறுகளை அறிந்திருப்பவர் அக்குறைகளை மறைத்தால் அல்லாஹ் அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைப்பான். இம்மை மறுமை நலன்களில், ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான். உதவி என்பது பிரார்த்தனை, உடல் ரீதியான மற்றும் பணரீதியான உதவி மற்றும் ஏனையவை இதில் உள்ளடங்கும். எவர் அல்லாஹ்வின் திருமுகம் நாடி மார்க்க அறிவைக் கற்கச் செல்கிறாரோ அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான். இறையில்லங்களில் ஒன்றில், ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தங்களுக்குள் அதை கற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தாரின் மீது அமைதியும், பாதுகாப்பும் இறங்குவதோடு, அல்லாஹ்வின் அருளும், கருணையும் அவர்களைச் மூடிக்கொள்கிறது. மேலும் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் இருப்பவர்களின் முன்னிலையில் அவர்களைப் பாராட்டுகிறான். இவ்வாறு அல்லாஹ் உயர்ந்த சபையில் அடியார்கள் பற்றிக் குறிப்பிடுவதே அவர்களின் சிறப்புக்கு போதுமானதல்லவா! நன்மையான செயல்கள் போதுமானதாக இல்லாத ஒருவர் நன்மையான செயல்களைச் செய்தவர்களின் தரத்திற்கு உயர்த்தப்பட மாட்டார். எனவே, அவர் தனது வம்சாவளி அந்தஸ்த்தையும்;;, தனது முன்னோர்களின் கௌரவத்தையும் நம்பி, நன்மையான செயல்களைச் செய்வதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

فوائد الحديث

இந்த ஹதீஸானது பல்வேறு வகையான அறிவுகள், விதிகள், மற்றும் நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஹதீஸாகும். முஸ்லிம்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுவதோடு, கல்வி, செல்வம், பரஸ்பர உதவி, பயனுள்ள ஆலோசனை, அறிவுரை கூறுதல் போன்ற விடயங்களின் மூலமும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவர்களுடன் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளுமாறு வழிகாட்டுகிறது என இப்னு தகீகுள் ஈத் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

சிரமப்பட்டுக்கொண்டிருப்பவரின் சிரமத்தை இலகுபடுத்துமாறு ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

தனது சகோதரனுக்கு உதவி செய்யும் அளவுக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்பதனால் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு உதவி செய்ய ஊக்குவிக்கப்பட்டிருத்தல்.

ஒரு முஸ்லிமின் குறைகளை மறைப்பதற்கான வழிகளில் ஒன்று: அவரது குறைகளைத் தேடுவதைத் தவிர்ப்பதாகும். ஸலபுகளில் சிலர் கூறியதாக பின்வரும் செய்தி அறிவிக்கப்படுகிறது. நான் எந்தக் குறைகளும் இல்லாத மக்களைச் சந்தித்தேன், ஆனால் அவர்கள் மற்றவர்களின் குறைகளைப் பற்றிப் பேசினார்கள், அதனால் மக்கள் அவர்களின் குறைகளைக் குறிப்பிடத் தொடங்கினர். அத்துடன், தங்களிடம் குறைகள் இருந்தபோதிலும் மற்றவர்களின் குறைபேசாது இருந்தோரையும் சந்தித்தேன். ஆனால் அவர்களின் குறைகள் மறக்கப்பட்டன.

ஒருவரிடம் காணப்படும் தீமையைத் தடுக்காது விட்டுவிடுவதும், அதை மாற்றுவதற்கு முயற்சி செய்யாது இருப்பதும் தவறுகள் மற்றும் குறைகளை மறைப்பதற்கான வழியல்ல. மாறாக, ஒழுக்கக்கேடு அல்லது அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபடாதவர்களை பொறுத்தவரை அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவரில் காணப்பட்ட குறையை மறைக்கவும் வேண்டும், ஆனால் மோசமான நடத்தைக்கு பெயர் பெற்ற ஒருவரைப் பொறுத்தவரை, அதிக தீங்கு விளைவிக்காத பட்சத்தில் அவரது தவறுகளை மறைப்பது வரவேற்கத்தக்தல்ல. அதற்கு பதிலாக, அவரது விவகாரம் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும், காரணம், அவரது தவறுகளை மறைப்பபதானது அவரது ஒழுக்கக்கேட்டை ஊக்குவித்து பிறரை தொந்தரவு செய்வதற்கான ஊக்கத்தையும் துணிவையும் ஏற்படுத்த வழிவகுப்பதோடு, இவ்வாறான தீய நடத்தையும்,பிடிவாதமும் நிறைந்த ஏனையோரை ஊக்கப்படுத்தி துணிவு கொள்ள வகைசெய்யும்.

அறிவைத் தேடுதல், அல்குர்ஆனை ஓதுதல் மற்றும் படித்தல் போன்ற செயல்களை செய்வதற்கு ஊக்குவித்தல்.

பள்ளியில் அல் குர்ஆனை ஓதுவதற்காக ஒன்றுகூடுவதன் சிறப்புக்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். அத்துடன் பாடசாலை, பாதுகாப்புப் படை போன்றவற்றில் அல்குர்ஆனை ஓதுவதற்காக ஒன்று கூடுவதானது பள்ளிவாயிலில் ஒன்று கூடுவதற்கான நன்மையைப் பெற்றுத்தரும் என இமாம் நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ் கூலிவழங்குவதை பரம்பரையை அடிப்படையாகக் கொள்ளாது, செயல்களை அடிப்படையாகக் கொண்டே ஒழுங்கு படுத்தியுள்ளான்.

التصنيفات

அறிவின் மகிமை