''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத)…

''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;.நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் கூறினார்கள் : ''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

திருமணத்திற்குப் பிறகு, ஒருவரின் பார்வையும் அந்தரங்க உறுப்புகளும் தடைசெய்யப்பட்ட விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்படும், மேலும் ஒழுக்கக்கேடான செயல்களில் விழும் வாய்ப்புகள் குறையும் என்பதால், நபி (ஸல்) அவர்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குரிய சக்தியும், திருமணத்திற்குரிய வசதிகளை பெற்ற அனைவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஊக்குவித்தார்கள். உடலுறவு கொள்ளும் சக்தி இருந்தும்;,திருமணச் செலவுகளுக்கான வசதி ஒருவருக்கு இல்லை என்றால், அவர் நோன்பு நோற்க வேண்டும், ஏனெனில் நோன்பானது காமத்தைக் குறைக்க உதவுகிறது.

فوائد الحديث

இஸ்லாம் (மனிதர்களை) கற்பை பேணி, ஒழுக்கக்கேட்டிலிருந்து மனிதனை பாதுகாப்பதில் மிக ஆர்வமாக உள்ளது.

திருமணச் செலவுகளுக்கான வசதிபெறாதவர்கள் நோன்பு நோற்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அது காமத்தை- இச்சையை- பலவீனப்படுத்தி கட்டுப்படுத்துகிறது.

இங்கே, 'விஜா' (காஸ்ட்ரேஷன்) (விதையடித்தல்)அல்லது –(விதைநீக்கம்) உடன் நோன்பை ஒப்புமையாகக் கூறுவது, ஏனெனில் 'விஜா' (காஸ்ட்ரேஷன்) என்பது இரண்டு விந்தணுக்களின் நரம்புகளையும் வெட்டுவதற்கு வழங்கப்படும் பெயர், இதன் விளைவாக உடலுறவுக்கான ஆசை முடிந்து விடும். அதேபோல், நோன்பானது உடலுறவுக்கான விருப்பத்தை பலவீனப்படுத்துகிறது.

التصنيفات

நோன்பின் சிறப்பு, திருமணத்தின் சிறப்பு