அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை…

அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும். ஏனெனில், யார் தனது பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு எதிராக நாம் அல்லாஹ்வின் வேதத்தை நிறைவேற்றுவோம்

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்-அஸ்லமி (ரழி) அவர்களுக்கு கல்லெறிந்து தண்டனை வழங்கிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும். ஏனெனில், யார் தனது பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு எதிராக நாம் அல்லாஹ்வின் வேதத்தை நிறைவேற்றுவோம்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை அல்பைஹகீ அறிவத்திருக்காறார் - இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

விபச்சாரத்திற்கான தண்டனையாக மாயிஸ் , இப்னு மாலிக் அல்-அஸ்லமி (ரழி) அவர்களுக்கு கல்லெறிந்து தண்டனையை நிறைவேற்றியதன் பிறகு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எழுந்து நின்று மக்களை நோக்கி, 'இந்த அருவருப்பான அல்லாஹ் தடைசெய்த அசிங்கமான மற்றும் வெறுக்கத்தக்க பாவங்களை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அருவருப்பானவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் இரண்டு விடயங்களை செய்ய வேண்டும்: முதலாவது: அல்லாஹ் தன்னை மறைத்து வைத்திருப்பது போல் தன்னை மறைத்துக் கொள்வது, தனது பாவத்தை வெளிப்படுத்த வேண்டாம். இரண்டாவது: அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு, அதில் நிலைத்திருக்க வேண்டாம். யாருடைய பாவம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறதோ, அந்த பாவத்திற்காக அல்லாஹ்வின் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை நாங்கள் செயல்படுத்துவோம்.

فوائد الحديث

பாவம் செய்த நபர் தன்னை மறைத்துக்கொண்டு, தனக்கும் தனது இறைவனுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் செய்த பாவத்திலிருந்து மனந்திரும்ப ஊக்குவிக்கப்பட்டிருத்தல்.

இஸ்லாத்தின் தண்டனைக்குரிய குற்றம் பற்றி ஆட்சியாளருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், ஷரீஆவில் சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட தண்டனையைச் செயல்படுத்துவது அவசியமாகிறது.

பாவங்களைத் தவிர்த்து, அதற்காக தவ்பா கோருவது கடமையாகும்.

التصنيفات

பாவமீட்சி