إعدادات العرض
1- ஸஅத் இப்னு முஆதே!கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்.
2- அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.
3- நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்தி, கடுமையான வார்த்தை பிரயோகித்து கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன் என்கிறார்கள். நான் கஞ்சன் அல்ல.
4- எனது ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே! வணக்குக்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு.
5- நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்.
6- ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.
7- நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள், எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்
8- அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
9- நீங்கள்'அலைகஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள். ஏனெனில் 'அலைக்கஸ்ஸலாம்'என்பது இறந்து போனவருக்குச் சொல்லும் வாழ்த்தாகும்